சாலையோர உணவை ருசி பார்த்த சர்வதேச தலைவர்களின்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்
சாலையோர உணவை ருசி பார்த்த சர்வதேச தலைவர்களின் இல்லத்தரசிகள்
‘ஜி-20’ மாநாட்டுக்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள சர்வதேச தலைவர்களுடன் அவர்களின் மனைவிகளும் வந்துள்ளனர். அவர்களுக்கு டெல்லி ஜெய்ப்பூர் மாளிகையில் நேற்று சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதில், சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும் சில சாலையோர உணவுகளையும் பல்வேறு நாட்டு முதல் பெண்மணிகள் ருசி பார்த்தனர்.
பின்னர், தேசிய நவீன கலைக்கூடத்தில் விசேஷமாக இடம்பெற்ற கண்காட்சியை அவர்கள் கண்டு ரசித்தனர்.
துருக்கி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோரின் மனைவியர் இந்த கண்காட்சியை வெகுவாக ரசித்தனர். அவர்கள் சிறுதானியங்கள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்ததாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Update: 2023-09-09 21:13 GMT