ஜனாதிபதி விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் ... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்

ஜனாதிபதி விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள்

ஜி-20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருது அளித்தார். இந்த விருந்தில் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றின் கலவையான பாரதம் வெளிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுவை அனைவரையும் இணைக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

விருந்தின் தொடக்க உணவாக ‘புதிய காற்றின் சுவாசம்' என்ற உணர்வில் தினை இலை, தயிர் உருண்டை மற்றும் பால், கோதுமை, கொட்டைகள் வழங்கப்பட்டன. மசாலா சட்னியும் வழங்கப்பட்டது.

முதன்மை உணவாக வனவர்ணம் அதாவது ‘மண்ணில் இருந்து வலிமை' என்ற உணர்வில் பளபளப்பான வன காளான்களுடன் சேர்ந்த பலாப்பழ துண்டுகள், முறு முறு சிறு தானியங்கள் மற்றும் கறிவேப்பிலை கலந்த கேரள சிவப்பு அரிசி சோறு, இவற்றுடன் இந்திய பிரட்டுகள், மும்பை பாவ், வெங்காய விதையின் சுவை கொண்ட பால் மற்றும் கோதுமை சேர்ந்த மென்மையான ரொட்டி, ஏலக்காய் சுவை கொண்ட இனிப்பு ரொட்டி ஆகியவை பரிமாறப்பட்டன.

இறுதியாக ‘பொன் பானை' என்ற உணர்வில் ஏலக்காய் வாசனையுள்ள தினை புட்டு மற்றும் பால், சிறுதானியங்கள், கோதுமை கலந்த இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.

பானங்களைப் பொறுத்தவரை காஷ்மீரி காவா, பில்டர் காபி, டார்ஜிலிங் டீ போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சாக்லெட் பீடாவும் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-09 22:32 GMT

Linked news