இன்று நடைபெறுகிறது அயோத்தி ராமர் கோவில்... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி

இன்று நடைபெறுகிறது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறும்.

ராமர், திரேத யுகத்தில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தவர் ஆவார். அதனால், அபிஜித் முகூர்த்தத்தில் சிலை பிரதிஷ்டை நடக்கிறது.

பஞ்சாங்கப்படி, இன்றைய தினம் பவுஷ் மாதம் சுக்ல பட்சத்தின் துவாதசி திதி ஆகும். அபிஜித் முகூர்த்தத்துடன், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரவி யோகம் ஆகியவையும் இந்த நாளில் அமைந்துள்ளன.

கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்படும். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மங்கல இசை இசைப்பார்கள்,

Update: 2024-01-21 19:20 GMT

Linked news