சிலை பிரதிஷ்டை விழாவில், பிரதமர் மோடி சிலை... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
சிலை பிரதிஷ்டை விழாவில், பிரதமர் மோடி
சிலை பிரதிஷ்டை விழாவில், பிரதமர் மோடி, உத்தரபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ்ஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், 125 துறவிகள், மடாதிபதிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கிறார்கள்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை 10.55 மணிக்கு ராமஜென்மபூமிக்கு வருகிறார். பகல் 12.05 மணி முதல் 12.55 மணி வரை விழாவில் பங்கேற்கிறார். பின்னர், குபேர் தில சிவன் கோவிலில் ராமர் சிலையை வழிபடுகிறார்.
Update: 2024-01-21 19:50 GMT