அயோத்தி கோவிலின் தரிசன நேரம் அயோத்தி பால ராமரை... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
அயோத்தி கோவிலின் தரிசன நேரம்
அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்கள் https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஆனால் இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. இதே இணையதளத்தில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம். கோவில் திறக்கப்பட்டவுடன் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-01-21 21:54 GMT