கிழக்கு உக்ரைன் மீது கவனம் உக்ரைன் மீதான... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி - விசாரணைக்கு அழைப்பு

கிழக்கு உக்ரைன் மீது கவனம்

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 3 மாதங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி கண்ட ரஷிய படைகள் தங்கள் முழு கவனத்தையும் கிழக்கு உக்ரைன் பக்கம் திருப்பியுள்ளனர்.

அங்கு ரஷிய அதிபர் புதினால் சுதந்திர நாடுகளாக அங்கீகரிகப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்கள் அமைந்துள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. இதன்காரணமாக போர் உக்கிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள செவிரோடொனெட்ஸ்க் நகருக்குள் ரஷிய படைகள் நேற்று நுழைந்துவிட்டன. அந்த நகரின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் தங்கள் நிலைகளை ரஷிய படைகள் வலுப்படுத்தி வருவதாகவும், தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை அப்பகுதிக்குள் கொண்டு வருவதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-30 23:53 GMT

Linked news