இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு... ... வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கிறார்கள் - பிரதமர் மோடி பேச்சு
வாஷிங்டன்,
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் போது பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்றைய இந்த அற்புதமான இரவு விருந்து அளித்தற்க்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது வருகையை வெற்றிகரமாக கவனித்துக்கொண்டதற்காக முதல் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும், இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கிறார்கள்... இந்தியாவில் குழந்தைகள் ஹாலோவீனில் ஸ்பைடர்மேன் ஆகின்றனர், அமெரிக்காவின் இளைஞர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடுகிறார்கள்.
இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் நீண்ட தூரம் வந்துள்ளனர். அமெரிக்காவின் உள்ளடங்கிய சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய அமெரிக்கர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
கிரிக்கெட்டிலும் அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற அமெரிக்க அணி தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.