தமிழகத்தில், வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல்... ... கச்சத்தீவை காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கைக்கு தாரைவார்த்தன - பிரதமர் மோடி தாக்கு

தமிழகத்தில், வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் பிரசாரம் களைகட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தும் மக்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 6 முறை தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று சென்னையில் நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக 7-வது முறையாக தமிழகம் வந்தார்.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்தநிலையில், இன்று காலை சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். காலை 10.30 மணியளவில் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அதன்பிறகு, கோவை செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), கூட்டணி கட்சி வேட்பாளர்களான த.மா.கா.வை சேர்ந்த பி.விஜயகுமார் (ஈரோடு), பா.ம.க.வை சேர்ந்த ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மேலும் 3 முறை தமிழகம் வருகை தர இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி 13-ந்தேதி பெரம்பலூர், 14-ந்தேதி விருதுநகர், 15-ந்தேதி திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்.

Update: 2024-04-10 04:31 GMT

Linked news