டி-20 கிரிக்கெட் போட்டி - போக்குவரத்து மாற்றம் ... ... நாளை குடியரசு தினம்: சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்

டி-20 கிரிக்கெட் போட்டி - போக்குவரத்து மாற்றம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விக்டோரியா விடுதி சாலைக்கு செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலையிலிருந்து கண்ணகி சிலை சாலை செல்ல அனுமதில்லை பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக, நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும்.

Update: 2025-01-25 03:39 GMT

Linked news