ரூ.45 லட்சம் கோடி இழப்பு உக்ரைன் மீது ரஷியா போர்... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு


ரூ.45 லட்சம் கோடி இழப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நேற்றுடன் 100 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் போர் ஓய்ந்த பாடில்லை. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளன.

இப்படி உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்த நாட்டின் மந்திரிசபை மதிப்பிட்டுள்ளது. 600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உக்ரைன் மந்திரிசபை தெரிவித்துள்ளது.

Update: 2022-06-03 21:35 GMT

Linked news