அசோவ்ஸ்டல் உருக்காலை ரஷிய ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தன
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றுவதற்கான பல மாத காலப் போரில் ரஷியா வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளது.
அசோவ்ஸ்டல் உருக்காலையை பாதுகாக்கும் கடைசி வீரர்களும் இப்போது சரணடைந்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
531 உக்ரேனிய படை வீரர்கள் அங்கு இருந்து வெளியேறிய பின்னர் நகரமும் அதன் எஃகு ஆலையும் இப்போது "முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளன" என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த நிறுவனத்தின் நிலத்தடி வசதிகள்ரஷிய ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தன" என்று அது ஒரு அறிக்கையில் மேலும் கூறியது.