உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்கில் நிலைமை கடினமாக உள்ளது... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்


உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்கில் நிலைமை கடினமாக உள்ளது - ஜெலென்ஸ்கி

செவெரோடோனெட்ஸ்கில் நிலைமை "இப்போது மிகவும் கடினமாக உள்ளது. அத்துடன் அருகிலுள்ள நகரங்களும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

மேலும் லிசிசான்ஸ்க், பாக்முட் மற்றும் பல நகரங்கள் சக்திவாய்ந்த ரஷிய ராணுவ தாக்குதலை எதிர்கொள்கின்றன என்று அவர் தேசத்திற்கு தனது நேற்றைய இரவு வீடியோ உரையில் கூறினார்.

ரஷியப் படைகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பகுதிகளிலிருந்து மக்களைத் திரட்டி முதல் வரிசை தாக்குதலில் அவர்களை போருக்கு அனுப்புவதாகவும், அவர்களுக்குப் பின்னால் ரஷிய ராணுவம் வருவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

"போர் நீண்டுகொண்டே போகிறது, ரஷியாவின் வரலாற்றில் இன்னும் மோசமான, வெட்கக்கேடான மற்றும் இழிந்த விஷயங்கள் என்றென்றும் பொறிக்கப்பட்டு கொண்டிருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

Update: 2022-06-03 00:32 GMT

Linked news