புயல் சின்னம்: புதுச்சேரி, நாகையில் கடலோர... ... சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை
புயல் சின்னம்: புதுச்சேரி, நாகையில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
புதுச்சேரி
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனிடையே புதுச்சேரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார். காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அத்துமீறி கடற்கரைக்கு செல்வோரை எச்சரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்
நாகையில் நம்பியார் நகர் உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடற்கரைப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் மக்கள் கடற்கரையில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-11-28 04:38 GMT