30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை... ... தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
Update: 2025-03-15 04:20 GMT