இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்

இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு நிதி - அமைச்சர் கே.என். நேரு 



மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, “இதுவரை இல்லாத அளவுக்கு நகராட்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து நகராட்சிகளிலும், கால்வாய் தூர் வாருதல், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.

மதுரை புறநகர் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ. 1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Update: 2024-12-09 05:17 GMT

Linked news