பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இந்தியா... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்காக பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.ஏ) ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது எனவும், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு சர்வதேச நாணய நிதியம் அமைப்பை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐ.எம்.எப். அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ஆனாலும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கி அங்கீகரித்தது.