டெல்லி விமான நிலையத்தில் 138 விமானங்கள் ரத்து ... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
டெல்லி விமான நிலையத்தில் 138 விமானங்கள் ரத்து
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் நேற்று 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விமானங்கள் ரத்தாகின. இதில் 66 உள்நாட்டு விமானங்கள் புறப்பாடும், 53 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டன. மேலும் 5 சர்வதேச விமானங்களின் புறப்பாடும், 4 விமானங்களின் வருகையும் ரத்தாகி இருந்தன.
இதுதொடர்பாக விமான நிலைய சமூக வலைத்தள பக்கத்தில், “டெல்லி விமான நிலையம் வழக்கம்போல செயல்படுவதாகவும், இருந்தபோதிலும் மாறிவரும் வான்வெளி சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பயணிகள் சோதனை சாவடிகளில் கூடுதல் நேர காத்திருப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும் பதிவிடப்பட்டிருந்தது.