போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி


போர் பதற்றம் எதிரொலியாக, தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Update: 2025-05-09 04:34 GMT

Linked news