தொண்டர்களுக்கு உத்தரவிட்ட விஜய் இந்நிலையில்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தொண்டர்களுக்கு உத்தரவிட்ட விஜய்


இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் இருந்து நேற்று மதியம் காரில் புறப்பட்டார். இரவு 7 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.

பின்னர், சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். தொடர்ந்து அவர், பாரபத்திக்கு வந்து, மாநாட்டு பணிகளை பார்வையிட்டார். மேலும், சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம் குறித்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

ஒவ்வொரு பகுதியில் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் அவருக்கு விளக்கினர். தொண்டர்களுக்கு எந்த இடையூறும் வராத வகையில் மாநாட்டை நடத்த வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவிட்டார்.

Update: 2025-08-21 03:07 GMT

Linked news