தொண்டர்களுக்கு ‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

தொண்டர்களுக்கு ‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’ : வருகையைபதிவு செய்ய கியூஆர் கோடு



தவெக மாநாட்டு திடல் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 2500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 2500 பேருக்கு ஒன்று என ஒவ்வொரு பகுதியிலும் பிரமாண்டமான எல்.இ.டி. டி.வி.க்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் விஜய் பேசுவதையும், நடந்து சென்று மக்களை பார்ப்பதையும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு திடலில், 20 முதல் உதவி மையங்களும் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும் வந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்சுகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.

மாநாட்டின்போது யாருக்காவது மருந்துகள் தேவைப்பட்டால் அதனை உடனடியாக வழங்குவதற்கு டிரோன்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேடையின் பின்பகுதியில் வி.ஐ.பி.க்களுக்கான தனித்தனி ஏ.சி. குடில்கள் உள்ளன. இதுபோல், விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்காக 5 கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அமரும் இடத்தில் பச்சை கம்பளமும், வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடத்தில் சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டு உள்ளன

2 லட்சம் தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், குளுக்கோஸ் போன்றவை அடங்கிய ‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’ வழங்கப்படும் என தெரிகிறது. தொண்டர்கள் வருகையைபதிவு செய்ய கியூஆர் கோடு வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

Update: 2025-08-21 03:09 GMT

Linked news