புஸ்சி ஆனந்த் தலைமையில் சிறப்பு யாகம் பெண்கள்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
புஸ்சி ஆனந்த் தலைமையில் சிறப்பு யாகம்
பெண்கள் அதிக அளவில் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களை வழிநடத்தும் வகையில் 50 பெண் பவுன்சர்கள் உள்பட 550 பவுன்சர்கள் நேற்று கேளராவில் இருந்து வந்தனர். இதுதவிர, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரம் பேரும், காவல்துறை சார்பில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றி உள்ள 14 மதுபான கடைகளை மூட வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார். பின்னர், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று மழை குறுக்கிடு இருக்கக்கூடாது என வேண்டி நேற்று த,வெ,க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர், புனித நீரானது, மாநாட்டு மேடை மற்றும் திடல் பகுதிகளில் தெளிக்கப்பட்டது.
Update: 2025-08-21 03:12 GMT