மயங்கி விழுந்த தவெக தொண்டர்.. பதறி ஓடிய பவுன்சர்ஸ்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
மயங்கி விழுந்த தவெக தொண்டர்.. பதறி ஓடிய பவுன்சர்ஸ் - மாநாட்டில் பரபரப்பு
கடுமையான வெயில் வாட்டி வதைக்கும்நிலையிலும் மாநாட்டு திடலின் உள்ளே ஏராளமான தவெக தொண்டர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாநாட்டின் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அடியிலும், ஒலிபெருக்கி, தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளுக்கு அடியிலும் தொண்டர்கள் ஒதுங்கி வருகின்றனர். மேலும் கிரீன் பெட்ஷூட்களை பேரிகார்டுகளில் கட்டி அதன் நிழலில் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடும் வெயில் காரணமாக தவெக தொண்டர் ஒருவர் மயங்கி விழந்ததார். அப்போது உடனடியாக செயல்பட்ட பவுன்சர்கள், அவரை பாதுகாப்பாக மருத்துவ உதவிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Update: 2025-08-21 06:55 GMT