அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்

அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார் - ஆதவ் அர்ஜுனா

மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-

எல்லாருக்கும் எல்லாமும் என்ற அரசியலை 1967-ல் அண்ணா கொண்டு வந்தார். அண்ணா கொண்டு வந்த சமத்துவ அரசியலே திராவிடம். அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார்.

எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை, அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பாஜக பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அதிமுகவின் இன்றைய தலைமை எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அதை அரசியல் வெற்றியாக மாற்றி 2026-ல் மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, விஜய் முதல்வராகி அந்த கொள்கைகளை நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-08-21 11:18 GMT

Linked news