ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த “டியூட்”... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த “டியூட்” திரைப்படம்
பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘டியூட்’. இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தநிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Update: 2025-10-23 10:06 GMT