மம்முட்டியின் “களம்காவல்” படத்திற்கு “யு/ஏ”... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025

மம்முட்டியின் “களம்காவல்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' படம் வெளியானது. டீனா டென்னிஸ் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மம்முட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் மம்முட்டியுடன் ஜெயிலர் படல் வில்லன் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘களம்காவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது

‘களம்காவல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.  இந்த நிலையில், ‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Update: 2025-10-23 10:50 GMT

Linked news