சைவ சமயத்தின் முதல் குரு.. நந்தி எம்பெருமானின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025

சைவ சமயத்தின் முதல் குரு.. நந்தி எம்பெருமானின் சிறப்புகள்..!

இறைவனின் திருவருளால் ஸ்ரீ நந்தி எம்பெருமானை மகனாகப் பெற்ற சிலாத முனிவர் இவருக்கு வைத்த பெயர் ஜெபேசர். பெருந்தவம் புரிந்து பிறந்த ஜெபேசரின் எட்டாம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்று திருவையாற்றில் இருந்த மித்ரர், வருணர் என்னும் இரண்டு முனிவர்கள் கூறியதைக் கேள்வியுற்ற சிலாத முனிவர் மிகவும் மனம் வருந்தினார். தந்தையின் மன வருத்தம் அறிந்த ஜெபேசர் திருவையாற்றில் உள்ள சூர்யதீர்த்தக் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று சிவபெருமானை நோக்கி பத்து ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து இறைவனிடமிருந்து ஸ்ரீ நந்தி எம்பெருமான் என்ற பட்டமும் ஞான உபதேசமும் பெற்றார். மேலும் சைவ சமயத்திற்கு முதல் குருவாகவும் சிவசாரூபமும் சிவபெருமான் இவருக்கு தந்தருளினார்.

Update: 2025-10-23 11:25 GMT

Linked news