வெறும் 27 தியேட்டர்கள்.. இப்படியே போனால் தமிழ்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026

வெறும் 27 தியேட்டர்கள்.. இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்ல சாகும்- சுரேஷ் காமாட்சி வேதனை

எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது.

வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனாலும் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. அப்படியிருந்தும் திரையரங்குகள் தரவில்லை. என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமாக பதிவிட்டுள்ளார்.  

Update: 2026-01-02 04:59 GMT

Linked news