மலேசியாவில் இன்று ‘ஜனநாயகன்’ படத்தின் இசை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025
மலேசியாவில் இன்று ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் நேற்றே விஜய் மலேசியா சென்றுவிட்டார். அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. எனவே அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, க்ரிஷ், ஹரிசரண், திப்பு என பல பின்னணி பாடகர்களும், பாடகிகளும் விஜய் நடித்த படங்களிலிருந்து பாடல்களை மேடைகளில் பாடவிருக்கிறார்கள். வழக்கமாக, தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு டிரெண்டாகும். அந்த வகையில், இம்முறை விஜய் என்ன பேசுவார் என அவரது ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, விழா களைகட்டப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.