விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
அரையாண்டு விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-12-28 03:59 GMT