தக்காளி விலை திடீர் உயர்வு.! இல்லத்தரசிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025
தக்காளி விலை திடீர் உயர்வு.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
க்காளியின் விலை தற்போது ஆப்பிளுக்கு இணையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது திருப்பூர் மற்றும் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளில் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பனிப்பொழிவால் மகசூல் குறைந்துள்ளதால், விலை உயர்ந்தும் தங்களுக்கு பலனில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெளியூர் வியாபாரிகள் உடுமலை சந்தைக்கு அதிக அளவில் வந்து கொள்முதலை தொடங்கினால், விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. எல்லா சீசனிலும் தக்காளிக்கு சீரான விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.
Update: 2025-12-28 04:06 GMT