அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025

அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-12-28 05:03 GMT

Linked news