குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025
குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வார விடுமுறை என்பதாலும், காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்டனர். மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் பலரும் இங்கு வந்து புனித நீராடிவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.
Update: 2025-12-28 07:53 GMT