தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
Update: 2025-12-30 03:50 GMT