டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
1,300 விமானங்களை கையாளும் திறன் கொண்ட டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக இன்று 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன. வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-30 05:56 GMT