கன்னியாகுமரி: 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025

கன்னியாகுமரி: 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை அய்யப்பன் சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2026 ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டின் கடைசி நாள் என்பதாலும், அரையாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையாலும் கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Update: 2025-12-31 05:32 GMT

Linked news