திருவண்ணாமலையில் ஒரே நாளில் இருவர் கொலை -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
திருவண்ணாமலையில் ஒரே நாளில் இருவர் கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலையில் ஒரே நாளில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காந்திநகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ராமு என்பவரும், அண்ணாநகர் பகுதியில் சுனில் என்ற நபரும் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர்.
சுனில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த கோட்டை முத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் ராம் கொலை வழக்கில் 3-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-07-01 06:00 GMT