ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை - இன்று முதல் அமல்

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது.

இந்த நிலையில் இன்று முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

Update: 2025-07-01 07:21 GMT

Linked news