தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலை நிர்வாகத்திடம் பேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து பணிக்கு திரும்ப கூடிய அளவுக்கு காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று அரசு தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-07-01 10:37 GMT

Linked news