சிவகங்கை மாவட்டம் மடப்புரம் இளைஞர் அஜித் குமார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோவில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவ கல்லூரி டீன் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், "இளைஞர் உடலில் 44 காயங்கள் உள்ளன. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. இளைஞரின் உடலில் எந்த உறுப்பையும் விட்டு வைக்கவில்லை. அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.
Update: 2025-07-01 10:47 GMT