போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்த சிவகங்கை,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்த சிவகங்கை, மடப்புரம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அஜித் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் சந்தித்து பேசியபோது முதல்-அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உறுதியளித்தார். வருத்தமாக இருக்கிறது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார் என அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2025-07-01 13:33 GMT

Linked news