சிவகங்கை இளைஞர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

சிவகங்கை இளைஞர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்; முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற 28 வயது இளைஞர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் துறை விசாரணையின்போது மரணம் அடைந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது யாராலும் நியாயப்படுத்த முடியாத செயல் எனவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

Update: 2025-07-01 14:24 GMT

Linked news