இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: சற்று நேரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: சற்று நேரத்தில் விசாரணையை தொடங்குகிறார் மதுரை மாவட்ட நீதிபதி
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட நீதிபதி சற்று நேரத்தில் விசாரணையை தொடங்குகிறார்.
இதனப்டி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவுபடி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உள்ளார்.
திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் உதவிஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களில் நீதிபதி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-07-02 05:03 GMT