தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டி.ஜி.பி. உத்தரவு
சிவகங்கை திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும், காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது என்றும், உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே முக்கியமான வழக்குகளுக்கு சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-02 06:08 GMT