ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்..? - நயினார் நாகேந்திரன் கேள்வி


தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.

ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்-அமைச்சரின் கடமை?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-07-02 06:43 GMT

Linked news