பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கினார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கினார் அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், பாமக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அன்புமணிக்கு எதிராக எம்.எல்.ஏ. அருள் கருத்துகளை கூறி வந்த நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக அருள் எம்.எல்.ஏ. இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-07-02 06:51 GMT