இளைஞர் அஜித்குமார் மரணம் - நீதிபதியிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

இளைஞர் அஜித்குமார் மரணம் - நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள்


திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள், பென் டிரைவ்-கள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் விசாரணை தொடங்க உள்ளது.

திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள டிராவல்ஸ் பங்களா பயணியர் விடுதி அறையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணை அதிகாரியான மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வரும்நிலையில், நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகார், வழக்கின் CSR, FIR ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-02 07:00 GMT

Linked news