திருப்பதியில் பயங்கர தீ விபத்து திருப்பதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
திருப்பதியில் பயங்கர தீ விபத்து
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வேகமாக பற்றி எரிந்த தீ, பல கடைகளுக்கும் பரவியது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Update: 2025-07-03 04:21 GMT