எல்லை தாண்டி மீன் பிடித்தால்.. படகு பறிமுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025

எல்லை தாண்டி மீன் பிடித்தால்.. படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும் - இலங்கை அமைச்சர் எச்சரிக்கை

எல்லை தாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில், “இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2025-07-03 05:04 GMT

Linked news