"உயிருக்கு அச்சுருத்தல்.." - அஜித்குமார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025

"உயிருக்கு அச்சுருத்தல்.." - அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் பரபரப்பு பேட்டி

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த அவரது நண்பர் சத்தீஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அஜித்குமார் கஸ்டடி மரணத்தில் சாட்சிகளாக உள்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடந்தது என்ன என்பதை நீதிமன்றத்தில் கண்டிப்பாக தெரிவிப்பேன். நான் தான் அஜித்குமாரை அடித்தேன் என்று என் மீதே பொய் புகார் கூறினர்.

நீதி வழங்கக்கூடிய தெய்வமாக பார்க்கப்படும் மடப்புரம் காளியம்மன் கோவில் முன்பு இப்படி அநீதியாக நடந்ததை இப்போது வரை என்னால் ஏற்கமுடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-07-03 05:56 GMT

Linked news