பிரதமர் மோடி கானா நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
பிரதமர் மோடி கானா நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர் தனி விமானத்தில் நேற்று கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தில், வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கானா நாட்டுக்கான பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று மாலை புறப்பட்டார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-07-03 13:13 GMT